தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வடசென்னை’ படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் 10 நாட்களுக்குள் நீக்கப்படும் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியிருக்கிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ‘வடசென்னை’ படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் ரவுடிகளுக்குள் ஏற்படும் மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் ஆபாச வசனங்கள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் வடசென்னை படத்தில் இடம் பெறும் சர்ச்சைக்குரிய காட்சிகள் 10 நாட்களுக்குள் நீக்கப்படும் என்று கூறியிருக்கிறார். மேலும் வட சென்னை படத்தின் இரண்டாம், மூன்றாம் பாகத்தில் அங்கிருக்கும் மக்களின் இன்னல்கள், வாழ்வாதரங்கள் உள்ளிட்டவைகள் சொல்ல இருக்கிறோம். யாருடைய மனதையும் புன்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை’ என்று கூறியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்