ரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு – சர்க்கார்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்கார்’ படத்தை தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

‘சர்கார்’ படம் தீபாவளி பண்டிகையான வருகிற நவம்பர் 6-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர்.

 உலகம் முழுவதும் அதிகமான தியேட்டர்களை ‘சர்கார்’ படத்துக்கு ஒதுக்கி உள்ளனர். ரசிகர்களும் தீபாவளியை சர்கார் படத்தோடு கொண்டாட பேனர்கள், சுவரொட்டிகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் தீபாவளிக்கு முன்னதாக வருகிற 2-ந் தேதி ‘சர்கார்’ படத்தை திரைக்கு கொண்டு வருவது குறித்து படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2-ந் தேதி வெள்ளிக்கிழமை என்பதாலும் தொடர்ந்து விடுமுறையாக இருப்பதாலும் முன்னதாக படத்தை வெளியிட திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
Shakthi FM
samanwijesinghe1@gmail.com