யோகமடித்தது யோகிபாபுவுக்கு

நடிகர் யோகி பாபுவுக்கு கன்னட மாடல் அழகியான எலிஸ்ஸா ஜோடியாகியுள்ளார்.

நடிகர் யோகி பாபு இன்றைய தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறார்.

அஜித், விஜய், சூர்யா, சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

அதே சமயம் சாம் ஆண்டன் இயக்கும் கூர்கா படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது யோகி பாபுவுக்கு ஜோடியாக கன்னட மாடலிங் அழகியான எலிஸ்ஸா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

4 மங்கீஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில், சில முக்கிய நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் பணிபுரிகிறார்கள்.

கிருஷ்ணன் வசந்த் (ஒளிப்பதிவு) மற்றும் ரூபன் (எடிட்டிங்) ஆகியோரும் பணிபுரிகிறார்கள். மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Shakthi FM
samanwijesinghe1@gmail.com