entertainment news

விஜய்யுடன் மோதும் விஜய் அன்டனி

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் வெளியாகின்றன. ஆனால் பெரிய படங்கள் மட்டும் பெரும்பாலும் போட்டியில்லாமலே தான் வெளியாகும். ஆனால் தீபாவளிக்கு வெளியாக உள்ள சர்கார் படத்துடன் மொத்தம் 3 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதோ அந்த 3 படங்களின் லிஸ்ட் 1. என்னை நோக்கி பாயும் தோட்டா 2. பில்லா பாண்டி 3. திமிரு பிடிச்சவன் இவைகளின் எத்தனை படங்கள் சொன்னபடி வெளியாகும் என்பதை தீபாவளி வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நடந்தது சிம்பு நயந்தாரா திருமணம்

நடிகர் சிம்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் காதலித்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர் என கெட்டவன் பட இயக்குனர் GT நந்து இப்படி கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் சிம்பு-நயன்தாரா கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டதாக கூறியுள்ளார். மேலும் சிம்புவின் குடும்பத்திற்கு ஜோசியத்தில் அதிகம் நம்பிக்கை உள்ளதாம். சிம்பு-நயன்தாரா சேர்வார்களா என ஜோசியம் பார்த்தோம். அவர்கள் தனியாக இருந்தால் தான் நல்ல வாழ்க்கை இருக்கும் என திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெரு ஜோசியர் கூறிவிட்டார். அதை கேட்டு தான் அவர்கள் பிரிந்திருக்கலாம் என GT நந்து தெரிவித்துள்ளார்.

ரெட்டியாகும் விஜய் சேதுபதி

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ என்னும் வரலாற்றுப் படத்தில் நடித்துவருகிறார். டோலிவுட்டின் பிரமாண்டமான வரலாற்றுப் படமாகக் கருதப்படும் இப்படத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா, `நான் ஈ’ சுதீப் என மிகப் பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளனர். ஜோர்ஜியாவில் நடந்துவரும் படப்பிடிப்பில், விஜய்சேதுபதியும் சுதீப்பும் சமீபத்தில் இணைந்தனர். இவர்கள் இருவரும், அவர்களது கதாபாத்திரத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிரஞ்சீவி – நயன்தாரா திருமணக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட போட்டோக்கள், டீசர் ஆகியவை ஏற்கெனவே வைரலானது. ராஜா நர்சிம்ம ரெட்டியின் `விசுவாசி ஓபயா’

உங்கள் வாசனை எனக்குப் பிடித்திருக்கிறது ???

மனைவி இருக்கும்போதே இளம்பெண்களுடன் டேட்டிங் செல்லும் ஹிர்திக் ரோஷனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என இந்தி நடிகை கங்கனா ரனாவத் புதுத் தாக்குதலை ஆரம்பித்துள்ளார். கங்கனா ரனாவத் – ஹிர்திக் ரோஷன் இடையே மீண்டும் மோதல் உருவாகியுள்ளது. கங்கனா ரனாவத் – ஹிர்திக் ரோஷன் இருவரும் பாலிவுட்டின் பிஸி நட்சத்திரங்கள். இருவரும் காதலித்து வந்ததாகவும், இதனால்தான் ஹிர்திக் மனைவி விவாகரத்து பெற்றுச் சென்றார் எனப் பாலிவுட் மீடியாக்கள் கூறி வந்தன. அதற்கு ஏற்றாற்போல் `நானும் ஹிர்திக்கும் காதலித்து வந்தது உண்மை. ஆனால், ஹிர்திக் காதலை ரகசியமாகவே நீட்டிக்க விரும்பியதால் அவரைவிட்டு விலகினேன்’ எனக் கங்கனா புகார் கொடுத்தார். சுமார்

ஆயுத பூஜையில் சர்க்கார்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் A .R .முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் சர்க்கார் தீபாவளிக்கு வெளியாவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மத்தியில் திரைப்படத்தின் Teaser வெளியீட்டு திகதியை சன் பிக்சர்ஸ் அறிவித்திருப்பது தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி விஜயதசமியன்று Teaser வெளியிட உத்தேசித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சின்மயி லீக்ஸ் இல் சிக்கிய இலங்கை கிரிக்கட் வீரர் ?

#MeToo என்று அண்மையில் மிகப்பிரபல்யமடைந்து வரும் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை வெளிப்படுத்திவரும் நேரத்தில் பாடகி சின்மயி வைரமுத்துவுக்கு எதிராக கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதன் தொடர்ச்சியாக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஒருவரும் தொடர்புபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றப்பயிற்சி

இயக்குனர் பாலாவுடன் ‘தாரை தப்பட்டை’ படத்தில் பணிபுரிந்த வெர்னிக் இயக்கும் படம் ‘குற்றப்பயிற்சி’. சமீபகாலமாக கதையில் முக்கியத்துவமுள்ள கேரக்டர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் த்ரிஷா இந்த படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் கதை 1980 காலகட்டத்தின் பின்னணியில் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளதாம். இதில் த்ரிஷா பெண் துப்பறிவாளர் வேடம் ஏற்று நடிக்க, சுரபி, சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலரும் த்ரிஷாவுடன் நடிக்கின்றனர். உண்மை சம்பவத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள கதையாம் ‘குற்றப்பயிற்சி’ தமிழ் சினிமாவில் படத்தின் முதன்மை கதாபாத்திரம் பெண் துப்பறிவாளராக வருவது இதுதான் முதல் முறை என்கின்றனர் படக்குழுவினர். இந்த படத்திற்கு ரதன் இசை அமைக்கிறார்.

மணிரத்னம் படத்தில்...

மணிரத்னம் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் விஜய்சேதுபதி, ஃபஹத் ஃபாசில், அரவிந்த்சாமி, சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் முதலானோர் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவலை படக்குழுவினரே உத்தியோகபூர்வாமக அறிவித்திருந்தார்கள். இப்போது இந்த படத்தில் மேலும் சில நட்சத்திரங்கள் இணையவிருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. அவர்களில் ஒருவர் மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்றுவெளியிடை’ படத்தில் நடித்த பாலிவுட் நடிகையான அதிதி ராவ் ஹைத்ரி. இன்னொருவர் மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமாக அமைந்த ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தில் நடித்த ஆண்டனி வர்கீஸ்! இவர்கள இருவரும் மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள் என்றும் இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின்

இசையமைப்பாளராகிய பாடகர்

நடிகனாக இருந்து பாடகனாக அவதாரம் எடுத்து மீண்டும் நடிகராகி இப்போது இசையமைப்பாளராகியிருக்கிறார் கிரிஷ். இந்த வருடத்தில் 2 படங்களுக்கு இசையமைக்கவுள்ளதாகவும் மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

தொடங்கியது மாரி 2

கடந்த 2015 வெளிவந்த மாரி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று (22.01.2018) ஆரம்பமானது. தனுஷ்,சாய்பல்லவி,ரோபோசங்கர் நடிக்கவிருக்கும் இந்த மாரி-2 திரைப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ஒரு பாடலை இசைஞானி இளையராஜா பாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.