Shakthi FM

நாடோடிகள் - 2

இரண்டாம் பாக வரிசையில் சமுத்திரக்கனி, சசிக்குமார் இணைந்து உருவாக்கிய ‘நாடோடிகள்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகவிருக்கிறது. இப்போது இந்த படம் குறித்த உத்தியோகபூர்வ தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தை சமுத்திரக்கனி இயக்க, சசிகுமாரே கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரவிவில் தொடங்கவிருக்கிறது. இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசை அமைக்கிறார். இந்த படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்க அஞ்சலி, அதுல்யா ஆகியோரிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

நிமிர் முன்னோட்டம் Jan 08 இல்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் “நிமிர்” அண்மையில் தணிக்கைக்குழுவினால் இப்படத்துக்கு ‘U’ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படத்துக்கான Trailer ஐ ஜனவரி 8ஆம் திகதி வெளியிடத் தீர்மானித்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார்.

பொங்கலுக்கு ஸ்கெட்ச்

விக்ரம் நடிப்பில் வடசென்னையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் ‘ஸ்கெட்ச்’ திரைப்படம் தணிக்கைக் குழுவில் `யு/ஏ’ சான்றிதழை பெற்றுள்ளது. இதையடுத்து படம் பொங்கலை முன்னிட்டு வருகிற 12-ஆம் திகதியன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. `வாலு’ படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக தமன்னா நடித்திருக்கிறார். ஆர்.கே.சுரேஷ், சூரி, அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா உட்பட பலரும் நடித்திருக்கும் இந்த படத்தில் நடிகை ஸ்ரீ பிரியங்கா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தமன் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.

ரஜினியை வாழ்த்திய அக்ஷய்

அரசியல் பிரவேசம் எடுத்துள்ள நடிகர் ரஜினிகாந்த், அடுத்து நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக கடந்த டிசம்பர் 31-ந் தேதி அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன. இந்த நிலையில் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ படத்தில் வில்லனாக நடிக்கும் இந்தி நடிகர் அக்‌ஷய் குமாரிடம், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து மும்பையில் நிருபர்கள் கருத்து கேட்டனர். அவர் கூறும்போது, “ரஜினிகாந்த் நிச்சயமாக சிறந்த அரசியல்வாதியாக வலம் வருவார்” என்றார். நடிகர் அக்‌ஷய் குமார் நடித்து வருகிற 26-ந் தேதி வெளியாக உள்ள ‘பேட் மேன்’ என்ற படம், கிராம மக்களுக்கு மலிவு விலையில்

ஜனவரி 4 இல் டிக் டிக் டிக்

ஜெயம் ரவி நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளிவரவிருக்கும் “டிக் டிக் டிக்” திரைப்படத்தின் இசை வெளியீடு எதிர்வரும் ஜனவரி மாதம் 4ம் திகதி நடைபெறவுள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஏற்கனவே “டிக் டிக் டிக்” திரைப்படத்தின் Single Track வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 31 இல் எனை நோக்கி பாயும் தோட்டா.................

கௌதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாகவிருக்கும் “எனை நோக்கி பாயும் தோட்டா” திரைப்படத்தின் மூன்றாவது பாடல் டிசம்பர் 31ஆம் திகதி வெளியிடப்படுமென படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே மறுவார்த்தை மற்றும் நான் பிழைப்பேனோ போன்ற பாடல்கள் வெளிவந்து சூப்பர்ஹிட்டாகியுள்ள நிலையில் இந்த மூன்றாவது பாடலுக்கான எதிர்பார்ப்பும் அதிகமாயுள்ளது.

"ஸ்கெட்ச்" திரைப்படத்தின் அடுத்த பாடலும் வெளிவந்தது

  சீயான் விக்ரம் தமன்னா நடிக்கும் “ஸ்கெட்ச்” திரைப்படத்தின் அடுத்த பாடலும் வெளிவந்தது. “தென்றல் தின்கிறாய்….” என்று ஆரம்பிக்கும் பாடலை Yazin Nizar மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் பாடியுள்ளனர். பாடலுக்கான இசை S.தமன்

சக்தி SANTA

சக்தி Santa நேயர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று நத்தார் பரிசுகளை வழங்கியிருந்தார்…

நத்தார் சிறப்பு ஆராதனை

நத்தார் சிறப்பு ஆராதனை யாழ் பாஷையூர் புனித அந்தோணியார் ஆலயத்தில் டிசம்பர் 24ஆம் திகதி இரவு 11.15 க்கு ஆரம்பமாகி தொடர்ச்சியாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆராதனையில் கலந்துகொண்டிருந்தனர்.