2018

இசையமைப்பாளராகிய பாடகர்

நடிகனாக இருந்து பாடகனாக அவதாரம் எடுத்து மீண்டும் நடிகராகி இப்போது இசையமைப்பாளராகியிருக்கிறார் கிரிஷ். இந்த வருடத்தில் 2 படங்களுக்கு இசையமைக்கவுள்ளதாகவும் மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

சக்தி FM இன் ஊடக அனுசரணையுடன் மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர்

சக்தி FM இன் ஊடக அனுசரணையுடன் மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் தென்னிந்தியப் பின்னணிப் பாடகர் V.V.பிரசன்னா கலந்து சிறப்பித்திருந்த இன்னிசை நிகழ்ச்சியின் முக்கிய தருணங்கள்…

தொடங்கியது மாரி 2

கடந்த 2015 வெளிவந்த மாரி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று (22.01.2018) ஆரம்பமானது. தனுஷ்,சாய்பல்லவி,ரோபோசங்கர் நடிக்கவிருக்கும் இந்த மாரி-2 திரைப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ஒரு பாடலை இசைஞானி இளையராஜா பாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தள்ளிப்போன நாச்சியார்

பாலா இயக்கத்தில் ஜோதிகா மற்றும் G.V.பிரகாஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘நாச்சியார்’ திரைப்படம் எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதி திரைக்கு வரும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்டது, ஆனால் இப்போது படத்தின் போஸ்டர் குறித்து சில வேலைகள் முடிவடையாததன் காரணமாக வெளியீட்டுத் திகதி ஒரு வாரம் தள்ளிப்போடப்பட்டுள்ளது. எனவே திரைப்படம் பெப்ரவரி 16ஆம் திகதி திரையரங்குகளுக்கு வரும் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Shakthi Radio Club 2018.01.20

சக்தி FM இன் வானலைக் கல்லூரியின் மூன்றாவது செயலமர்வின் மூன்றாம் நாளான இன்று[20.01.2018] ராகலை தமிழ் மகா வித்தியாலத்தில் மாணவ சக்தியை சந்தித்து பயிற்சிகளை வழங்கியிருந்தோம்…

Shakthi Radio Club 2018.01.19

புதிய சிந்தனைகள் நவீன செயற்றிட்டங்களுடன் சக்தியின் வானலைக்கல்லூரி மூன்றாவது செயலமர்வின் இரண்டாவது நாள் தலவாக்கலை St.Patrick’s கல்லூரியில் இன்று (19.01.2018) நடைபெற்றது