2018

சக்தி FM இன் வானலைக் கல்லூரியின் இரண்டாம் நாளான இன்று

சக்தி FM இன் வானலைக் கல்லூரியின் இரண்டாம் நாளான இன்று [22.02.2018] யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கான செயலமர்வு வெற்றிகரமாக நடைபெற்றது.

குற்றப்பயிற்சி

இயக்குனர் பாலாவுடன் ‘தாரை தப்பட்டை’ படத்தில் பணிபுரிந்த வெர்னிக் இயக்கும் படம் ‘குற்றப்பயிற்சி’. சமீபகாலமாக கதையில் முக்கியத்துவமுள்ள கேரக்டர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் த்ரிஷா இந்த படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் கதை 1980 காலகட்டத்தின் பின்னணியில் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளதாம். இதில் த்ரிஷா பெண் துப்பறிவாளர் வேடம் ஏற்று நடிக்க, சுரபி, சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பலரும் த்ரிஷாவுடன் நடிக்கின்றனர். உண்மை சம்பவத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள கதையாம் ‘குற்றப்பயிற்சி’ தமிழ் சினிமாவில் படத்தின் முதன்மை கதாபாத்திரம் பெண் துப்பறிவாளராக வருவது இதுதான் முதல் முறை என்கின்றனர் படக்குழுவினர். இந்த படத்திற்கு ரதன் இசை அமைக்கிறார்.

மணிரத்னம் படத்தில்...

மணிரத்னம் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் விஜய்சேதுபதி, ஃபஹத் ஃபாசில், அரவிந்த்சாமி, சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் முதலானோர் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவலை படக்குழுவினரே உத்தியோகபூர்வாமக அறிவித்திருந்தார்கள். இப்போது இந்த படத்தில் மேலும் சில நட்சத்திரங்கள் இணையவிருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. அவர்களில் ஒருவர் மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்றுவெளியிடை’ படத்தில் நடித்த பாலிவுட் நடிகையான அதிதி ராவ் ஹைத்ரி. இன்னொருவர் மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமாக அமைந்த ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தில் நடித்த ஆண்டனி வர்கீஸ்! இவர்கள இருவரும் மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள் என்றும் இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின்

இசையமைப்பாளராகிய பாடகர்

நடிகனாக இருந்து பாடகனாக அவதாரம் எடுத்து மீண்டும் நடிகராகி இப்போது இசையமைப்பாளராகியிருக்கிறார் கிரிஷ். இந்த வருடத்தில் 2 படங்களுக்கு இசையமைக்கவுள்ளதாகவும் மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.