#MeToo ல் இணைந்து கொண்ட இலங்கை பெண்.?

இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் பெயர் குறிப்பிடாமல், நடன இயக்குனரும் கல்லூரி வாசல், சிட்டிசன்,  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வில்லன் நடிகருமான கல்யாண் MASTER பாலியல் தொல்லை கொடுத்த விவரத்தை வெளியிட்டுள்ளார்

இதனை பாடகி சின்மயி தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அதில் இலங்கை பெண் கூறியிருப்பதாவது:-

“நான் இப்போது கொழும்பில் வசிக்கிறேன். எனக்கு நடனம் பிடிக்கும். தமிழ் சினிமாவில் டான்சராகும் ஆசையில் 2010-ல் சென்னை வந்தேன். டான்ஸ் மாஸ்டர் கல்யாணை சந்தித்து அவருடன் நடனம் ஆடினேன். அப்போது அவர் என்னை கண்ட இடத்தில் தொட்டார். உடனே ஆடுவதை நிறுத்தி விட்டேன்.எனது போன் நம்பரை வாங்கி அன்று இரவே போன் செய்தார். நான் அதிர்ந்துபோனேன். எனது கனவுகள் சிதைந்து போனதை உணர்ந்தேன். திறமையை மட்டும் நம்பி சினிமாவில் இருக்க முடியாது என்று உணர்ந்து இலங்கைக்கே திரும்பி விட்டேன்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.