ரெட்டியாகும் விஜய் சேதுபதி

ரெட்டியாகும் விஜய் சேதுபதி

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ என்னும் வரலாற்றுப் படத்தில் நடித்துவருகிறார். டோலிவுட்டின் பிரமாண்டமான வரலாற்றுப் படமாகக் கருதப்படும் இப்படத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா, `நான் ஈ’ சுதீப் என மிகப் பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளனர்.

ஜோர்ஜியாவில் நடந்துவரும் படப்பிடிப்பில், விஜய்சேதுபதியும் சுதீப்பும் சமீபத்தில் இணைந்தனர். இவர்கள் இருவரும், அவர்களது கதாபாத்திரத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிரஞ்சீவி – நயன்தாரா திருமணக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட போட்டோக்கள், டீசர் ஆகியவை ஏற்கெனவே வைரலானது. ராஜா நர்சிம்ம ரெட்டியின் `விசுவாசி ஓபயா’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துவரும் விஜய்சேதுபதி, தமிழ் பேசி நடிப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.