October 2018

இலங்கையில் கலைக்கட்டும் சர்க்கார்.

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. சர்கார் கொண்டாட்டங்கள் பல இடங்களில் களைகட்டி வருகின்றன. பொதுவாக தமிழகத்தைத் தாண்டி விஜய்க்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் இருப்பது கேரளாவில். கேரள ரசிகர்கள் விஜய்யை கொண்டாடுவதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டு விஜய் ரசிகர்களையே பொறாமைப்பட வைக்கும் விதமாக இருக்கும். இப்போது இலங்கையிலும் விஜய்க்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர் இலங்கை  விஜய் ரசிகர்கள் சர்கார் ரிலீசுக்காக 25 அடி உயர கட் அவுட்டை தயார் செய்துவரும் புகைப்படம் வெளியாகியுள்ளது. சர்கார் பட கொண்டாட்டங்கள் தமிழகத்தில் தான் ஆரம்பித்துள்ளது என நினைத்தால் இலங்கையிலும் அப்படித் தான் உள்ளது. திரைபடத்திக்கான முன்பதிவுகளும் இப்போது

விஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்.

விஜய் சேதுபதி குறுகிய காலத்தில் 25 படங்களில் நடித்துவிட்ட நிலையில், தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நிகழ்ச்சி பங்கேற்ற விஜய் சேதுபதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் என்ற வரிசையில் தற்போது போட்டியில் இருப்பவர்கள் விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன். இவர்களில் விஜய் சேதுபதி சில ஆண்டுகளிலேயே 25-வது படத்தை தொட்டுவிட்டார். இந்த சாதனையை கொண்டாடும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில் விஜய் சேதுபதிக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். சிவகார்த்திகேயன் நிகழ்ச்சிக்கு வருவது விஜய் சேதுபதிக்கே தெரியாதாம். 25

இயக்குனராகும் ஏ.ஆர்.ரகுமான்..

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பையை பிரபலப்படுத்த உருவாக்கப்பட்ட பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இயக்க, ஷாருக்கான் நடித்திருக்கிறார். ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டி வரும் நவம்பர் மாதம் 28-ம் தேதி ஒரிசா மாநிலம் புவனேஷ்வரில் தொடங்கவுள்ளது. ஹாக்கி உலகக்கோப்பை நடப்பதைப் பிரபலப்படுத்த ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு பாடல் ஒன்றை வெளியிட ஒரிசா அரசு முடிவு செய்தது. இந்திப் பாடலாசிரியர் குல்சார் பாடல் வரிகளில் ரகுமான் இசையமைத்துள்ள இப்பாடலுக்கான இசை வீடியோவை ரகுமானே இயக்குகிறார். ‘ஜெய் ஹிந்த் ஜெய் இந்தியா’ எனத் தொடங்கும் அந்தப் பாடலில் இந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு புவனேஷ்வரில் சமீபத்தில்

தொடரும் திரிஷா,சமந்தா மோதல்?

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷாவின் கதாபாத்திரத்தில் நடித்த சமந்தா, தற்போது மீண்டும் அது மாதிரியான இடத்தை பிடிக்க இருக்கிறார். சிம்பு, திரிஷா நடிப்பில் கவுதம்மேனன் இயக்கத்தில் வெளியான படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. இந்த படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தெலுங்கில் இதே படத்தை நானி-சமந்தா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கினார்.அங்கும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது காதல் படமான இதில் திரிஷாவுக்கும் சமந்தாவுக்கும் யார் சிறப்பான முறையில் ஜெஸ்சி வேடத்தை கொண்டு வருவது என போட்டியே நடந்தது. மீண்டும் இதேபோன்ற போட்டி உருவாகி உள்ளது. சமீபத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி

பாடகராகும் மொட்டை ராஜேந்திரன்.

காமெடி வேடங்களில் பிசியாக நடித்து வரும் மொட்டை ராஜேந்திரன், அடுத்ததாக புதியதிரைப்படம் ஒன்றில் பாடகராக அறிமுகமாக இருக்கிறார். நான் கடவுள்,வேலாயுதம் , உத்தம புத்திரன் ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர் மொட்டைராஜேந்திரன். இத் திரைப்படங்கள் மூலம் சிறந்த வில்லனாக பெயர் பெற்றார்.  இதன்பின் வெளியான ‘ராஜா ராணி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘திருடன் போலீஸ்’, ‘டார்லிங்’ ஆகிய படங்களில் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். காமெடி வேடங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது பாடகராக ஒரு திரைபடத்தில் அவதாரம் எடுத்துள்ளார். இசையமைப்பாளர் ஸ்ரீநாத் இசையில் உருவாகும் படத்திற்கு மொட்டை ராஜேந்திரன் ஒரு

சண்டக்கோழி 3 ???

சண்டக்கோழி 2 படம் வெளியாகி 6 மாதம் முடிவதற்குள்ளேயே சண்டக்கோழி 3 படம் ஆரம்பமாகும் அறிவித்துள்ளார் இயக்குனர் லிங்குசாமி. லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இருந்த படம் சண்டக்கோழி. இந்த படத்தின் வெற்றியை அடுத்து 13 வருடங்களுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இம்மாதம் 18-ம் திகதி வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த சந்திப்பில் பேசிய இயக்குனர் லிங்குசாமி சண்டக்கோழி 2 படம் வெளியாகிய ஆறு மாதத்திற்குள்ளேயே சண்டக்கோழி 3 படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளார். 13 வருடங்களுக்கு பிறகு இரண்டாம் பாகம் உருவாகி இருந்தாலும் சண்டக்கோழி

அட்லீ, விஜய் மூன்றாவது முறையாக இணைய உள்ள படத்தின் தலைப்பைப் பற்றி பேசியுள்ளார் அட்லீ. தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்கார் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க உள்ளார். இந்நிலையில் இயக்குனர் அட்லீ விருது விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவரிடம் விஜயை இயக்க உள்ள படத்தில் அவர் முதல்வராக நடித்தால் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என கேட்டுள்ளனர். அதற்கு அட்லீ ஆளப்போறான் தமிழன்என பெயர் வைப்பேன் என கூற அரங்கமே ஆரவாரத்தில் அதிர்ந்துள்ளது.

பெண் இயக்குனர்கள் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு..

பாலியல் புகாருக்கு ஆளான நடிகர்களுடன் பணியாற்ற மாட்டோம் என மும்பையில் பெண் இயக்குனர்கள் அறிவித்துள்ளனர். இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா மற்றும் தமிழ் பாடகி சின்மயியைத் தொடர்ந்து #Me Too  மூலம் தினந்தோறும் பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. திரையுலகம் உட்பட்ட பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. இதனால் பிரபல இந்திப்பட பெண் இயக்குனர்களான கொங்கனா சென் சர்மா, நந்திதாதாஸ், மேக்னா குல்சார், கவுரி ஷிண்டே, சோயா அக்தர் ஆகியோர் கூட்டாக சேர்ந்து  அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். “பாலியல் தாக்குதலுக்கு உள்ளான பெண்கள் அதை வெளிப்படையாகச் சொல்ல தொடங்கியிருப்பது நிச்சயம்

சந்திக்க தயாராக உள்ளேன்

வைரமுத்துவால் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக பாடகர் சின்மயி வெளியிட்ட தகவல்களை அடுத்து, தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்றும் நீதிமன்றத்தில் தன் மீது வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக இருப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார். வைரமுத்துவின் அதிகாரப்பூர்வ அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு காணொளியில் பேசும் அவர், தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பது தொடர்பாக ஒரு வார காலமாக வழக்கறிஞர்கள் மற்றும் அறிவுலக ஆன்றோர்களோடும் ஆலோசித்து தனது பதிலை தற்போது தெரிவித்துள்ளார். ட்விட்டர் வலைதளத்தில் தன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க பொய்யானவை என்றும் முற்றிலும் உள்நோக்கம் கொண்டவை என்றும் கூறியுள்ள வைரமுத்து, ”அந்த குற்றச்சாட்டுகள் உண்மையானவையாக