மணிரத்னம் படத்தில்…

மணிரத்னம் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் விஜய்சேதுபதி, ஃபஹத் ஃபாசில், அரவிந்த்சாமி, சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் முதலானோர் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவலை படக்குழுவினரே உத்தியோகபூர்வாமக அறிவித்திருந்தார்கள். இப்போது இந்த படத்தில் மேலும் சில நட்சத்திரங்கள் இணையவிருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. அவர்களில் ஒருவர் மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்றுவெளியிடை’ படத்தில் நடித்த பாலிவுட் நடிகையான அதிதி ராவ் ஹைத்ரி. இன்னொருவர் மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமாக அமைந்த ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தில் நடித்த ஆண்டனி வர்கீஸ்! இவர்கள இருவரும் மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள் என்றும் இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவிருக்கிறது என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இந்த படத்தின் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பதும், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் என்பதும் ஏற்கெனவே முடிவான விஷயமாகும்!