January 2018

சக்தியின் வானலைக்கல்லூரி - இரண்டாவது நாள்

சக்தியின் வானலைக்கல்லூரி மூன்றாவது செயலமர்வின் இரண்டாவது நாள் தலவாக்கலை St.Patrick’s கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவர்களின் பங்குபற்றுதலுடன் மிகச் சிறப்பாக 19.01.2018 அன்று நடைபெற்றது.

நம்ம வீட்டு திருமணம்

  சக்தியின் நம்ம வீட்டு திருமணத்தின் முதல் வெற்றியாளரான கொட்டகலையை சேர்ந்த கலாமதிக்கு திருமண ஆடைகள் மற்றும் திருமண மாங்கல்யம் ஆகியன எங்களுடைய அனுசரணையாளர்களால் இன்று (18/01/2018) வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சக்தி FM இன் அலைவரிசை பிரதானி R.P அபர்ணாசுதன் அவர்களும், சந்தைப்படுத்தல் முகாமையாளர் கிரிஷான் மற்றும் சக்தி FM இன் ஊழியர்களும் கலந்துகொண்டதோடு கலாமதியின் குடும்பத்தினரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

சக்தியின் வானலைக்கல்லூரி - Radio Club

  சக்தியின் வானலைக்கல்லூரி மூன்றாவது செயலமர்வு மலையகத்தின் செனோன் தமிழ் மகா வித்தியாலயத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்களின் பங்குபற்றுதலுடன் மிகச் சிறப்பாக 18.01.2018 அன்று நடைபெற்றது.

மீண்டும் இணையும் கௌதம் மேனன்  மாதவன் கூட்டணி

2001ஆம் ஆண்டு ‘மின்னலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் கௌதம் வாசுதேவ் மேனன். அப்படத்தில் நாயகனாக நடித்தவர் மாதவன். அந்தப் படம் வெளிவந்து கிட்டத்தட்ட 17 வருடங்கள் கழித்து மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படம் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் உருவாக்குவதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறதாம். தற்போது விக்ரமின் துருவநட்சத்திரம் மற்றும் தனுஷின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படங்களில் பிஸியாக கௌதம் மேனன் இருக்கிறார். அதேபோல் சற்குணம் இயக்கத்தில் உருவாகிவரும் இன்னும் பெயரிடப்படாத புதிய படமொன்றில் நடித்து வருகிறார்

விக்ரம் சூரியிடம் மன்னிப்பு கேட்டார்

விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா, ஸ்ரீமன், ஆர்.கே.சுரேஷ் முதலானோர் நடித்த ‘ஸ்கெட்ச்’ திரைப்படம் பொங்கலன்று வெளியானது. இப்படம் வெற்றிப் படமாக அமைந்ததை தொடர்ந்து இப்படத்தின் Success Meet சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகர் விக்ரம் பேசும்போது, ‘‘இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரனம் இயக்குனர் விஜய்சந்தர் தான். அவர் கதை சொன்ன இருபது நிமிடத்தில் இந்த கதை மிகப் பெரிய வெற்றியை கொடுக்கும் என்பதை நான் ஊர்ஜிதம் செய்தேன். விஜய்சந்தரை போல இந்த படத்தின் வெற்றிக்கு எஸ்.எஸ்.தமனின் இசையும் முக்கிய காரணம். அவர் உட்பட இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றிகள்’’ என்று தெரிவித்த விக்ரம் இந்த

கஜினிகாந்த்

ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களைத் தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் ‘கஜினிகாந்த்’ படம் மூலம் ஹாட்ரிக் கூட்டணி அமைத்துள்ளார் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். ஆர்யா, சாயிஷா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் இறுதியில் தொடங்கியது. இப்படத்திற்காக மொத்தம் 15 நாட்கள் மட்டுமே ப்ரீ புரொடக்ஷனுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டதாம். அதோடு, இப்படத்தின் படப்பிடிப்பை ஒட்டுமொத்தமாக 40 நாட்களில் முடிக்க திட்டமிட்டிருந்தனர். அதன்படி இம்மாதம் 30ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்யவிருக்கிறார்களாம். ஏற்கெனவே வெளிவந்த ‘கஜினிகாந்த்’ படத்தின் டீஸரைத் தொடர்ந்து சிங்கிள் டிராக் ஒன்றையும் ரிலீஸ் செய்துள்ளனர். அதோடு,

நாடோடிகள் - 2

இரண்டாம் பாக வரிசையில் சமுத்திரக்கனி, சசிக்குமார் இணைந்து உருவாக்கிய ‘நாடோடிகள்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகவிருக்கிறது. இப்போது இந்த படம் குறித்த உத்தியோகபூர்வ தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தை சமுத்திரக்கனி இயக்க, சசிகுமாரே கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரவிவில் தொடங்கவிருக்கிறது. இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசை அமைக்கிறார். இந்த படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்க அஞ்சலி, அதுல்யா ஆகியோரிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

சக்தியின் வெற்றிக்கான நேரம் - வெற்றியாளர்

சக்தியின் வெற்றிக்கான நேரம் – முதலாவது மோட்டார் சைக்கிள் வெற்றியாளராக தியத்தலாவையிலிருந்து தயானி தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

நிமிர் முன்னோட்டம் Jan 08 இல்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் “நிமிர்” அண்மையில் தணிக்கைக்குழுவினால் இப்படத்துக்கு ‘U’ சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படத்துக்கான Trailer ஐ ஜனவரி 8ஆம் திகதி வெளியிடத் தீர்மானித்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார்.