மீண்டும் இணையும் கௌதம் மேனன் மாதவன் கூட்டணி

மீண்டும் இணையும் கௌதம் மேனன்  மாதவன் கூட்டணி

2001ஆம் ஆண்டு ‘மின்னலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் கௌதம் வாசுதேவ் மேனன். அப்படத்தில் நாயகனாக நடித்தவர் மாதவன். அந்தப் படம் வெளிவந்து கிட்டத்தட்ட 17 வருடங்கள் கழித்து மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படம் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் உருவாக்குவதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறதாம்.

தற்போது விக்ரமின் துருவநட்சத்திரம் மற்றும் தனுஷின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படங்களில் பிஸியாக கௌதம் மேனன் இருக்கிறார். அதேபோல் சற்குணம் இயக்கத்தில் உருவாகிவரும் இன்னும் பெயரிடப்படாத புதிய படமொன்றில் நடித்து வருகிறார் மாதவன். இருவரும் அவரவர் புராஜெக்ட்டுகளை முடித்துவிட்டு கூட்டணி அமைப்பார்கள் என்று கூறப்படுகிறது.