நாடோடிகள் – 2

இரண்டாம் பாக வரிசையில் சமுத்திரக்கனி, சசிக்குமார் இணைந்து உருவாக்கிய ‘நாடோடிகள்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகவிருக்கிறது. இப்போது இந்த படம் குறித்த உத்தியோகபூர்வ தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தை சமுத்திரக்கனி இயக்க, சசிகுமாரே கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரவிவில் தொடங்கவிருக்கிறது. இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசை அமைக்கிறார். இந்த படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்க அஞ்சலி, அதுல்யா ஆகியோரிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.