பொங்கலுக்கு ஸ்கெட்ச்

பொங்கலுக்கு ஸ்கெட்ச்

விக்ரம் நடிப்பில் வடசென்னையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் ‘ஸ்கெட்ச்’ திரைப்படம் தணிக்கைக் குழுவில் `யு/ஏ’ சான்றிதழை பெற்றுள்ளது. இதையடுத்து படம் பொங்கலை முன்னிட்டு வருகிற 12-ஆம் திகதியன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

`வாலு’ படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக தமன்னா நடித்திருக்கிறார். ஆர்.கே.சுரேஷ், சூரி, அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா உட்பட பலரும் நடித்திருக்கும் இந்த படத்தில் நடிகை ஸ்ரீ பிரியங்கா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

தமன் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.

பொங்கலுக்கு சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’, பிரபுதேவாவின் `குலேபகாவலி’, அரவிந்த் சாமியின் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ மற்றும் சண்முகபாண்டியனின் `மதுர வீரன்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.