2017

பிரச்சினைகளைத் தெரிவிக்க பிரத்தியேக செயலியை அறிமுகப்படுத்தினார் கமல்

மக்களின் கருத்துக்களையும் பிரச்சினைகளையும் தெரிவிப்பதற்காக ‘மையம் விசில்’ ‘MAIAMWHISTLE’ என்ற பிரத்தியேக செயலியை தனது பிறந்த நாளான இன்று (07) நடிகர் கமல் ஹாசன் சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கமல் குறிப்பிட்டுள்ளார். மேலும், தாம் தமிழகம் முழுவதும் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், தீயவை நடக்கும்போது குரல் கொடுக்க ‘மையம் விசில்’ செயலி பயன்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் தங்களது பிரச்சினைகள் பற்றி பேச #theditheerpomvaa, #maiamwhistle, #virtuouscycles என்ற ஹேஷ்டேக்குகளையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். செயலியின் சோதனை தற்போது நடந்து வருவதாகவும், ஜனவரி மாதம் பயன்பாட்டிற்கு வரும் எனவும் கமல் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்த மெர்சல்

விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் `மெர்சல்’ படம் விமர்சனங்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அதன் தெலுங்கு பதிப்பிற்கு நீடித்த வந்த தடை தற்போது நீங்கியுள்ளது. விஜய் நடித்து வெளியாகி இருக்கும் ‘மெர்சல்’ படம் கடும் விமர்சனங்களுக்குள்ளானது. அரசியல் ரீதியான ஆதரவு மற்றும் எதிர்ப்பின் காரணமாக இந்திய அளவில் பேசப்பட்டது. விமர்சனங்களுக்கு இடையே `மெர்சல்’ படம் உலகம் முழுவதும் 200 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, இது ஒருபுறம் இருக்க `மெர்சல்’ படத்தின் தெலுங்கு பதிப்பான `அதிரிந்தி’ படத்திற்கு சென்சார் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் படம் தீபாவளிக்கு வௌியாகவில்லை. `மெர்சல்’ பிரச்சனையால் அதிரிந்தி படத்திற்கு

திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் இருப்பது உண்மைதான்: தமன்னா

கேரளாவில் முன்னணி கதாநாயகியை காரில் கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவமும் நடந்தது. நடிகைகள் ராதிகா ஆப்தே, கங்கனா ரணாவத், பிரியங்கா சோப்ரா ஆகியோரும் சினிமாவில் பாலியல் தொல்லைகள் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். சினிமாவில் நடிக்க வாய்ப்புக் கேட்டு வரும் புதுமுக நடிகைகள் இந்த தொல்லைகளுக்கு அதிகமாக ஆளாவதாகக் கூறப்படுகிறது. இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு அனுசரித்துப்போகும் நடிகைகளுக்கே வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகை தமன்னாவும் திரையுலகில் பாலியல் வன்மங்கள் நடப்பதாகப் புகார் கூறியுள்ளார். “திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் இருப்பது உண்மைதான். மற்ற நடிகைகள் சொல்லித்தான் இது எனக்கு தெரிந்தது. ஆனால் எனது வாழ்க்கையில் அதுபோன்ற சம்பவங்கள்

Kondattam

Radio Bus Promotion by #Kondattam team. Held on 30th & 31st October in Maligawatte & Jinthupittiya