2017

நமீதாவிற்கு விரைவில் திருமணம்

தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை நமீதாவிற்கு நவம்பர் 24 ஆம் திகதி திருமணம் நடக்கவுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்த நமீதாவுக்கு தற்போது 36 வயதாகிறது. தெலுங்கில் அறிமுகமான நமீதா, தமிழில் விஜயகாந்த் ஜோடியாக ‘எங்கள் அண்ணா’ படம் மூலம் அறிமுகமானார். சரத்குமாருடன் ‘ஏய்’ படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து சத்தியராஜுடன் ‘இங்கிலிஷ்காரன்’, விஜய்யுடன் ‘அழகிய தமிழ் மகன்’, அஜித்துடன் ‘பில்லா’ உட்பட ஏராளமான படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்தார். தற்போது அதிகப் படங்களில் நடிப்பதில்லை என்றாலும் நமீதாவுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தற்போது ‘பொட்டு’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.