December 27, 2017

டிசம்பர் 31 இல் எனை நோக்கி பாயும் தோட்டா.................

கௌதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாகவிருக்கும் “எனை நோக்கி பாயும் தோட்டா” திரைப்படத்தின் மூன்றாவது பாடல் டிசம்பர் 31ஆம் திகதி வெளியிடப்படுமென படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே மறுவார்த்தை மற்றும் நான் பிழைப்பேனோ போன்ற பாடல்கள் வெளிவந்து சூப்பர்ஹிட்டாகியுள்ள நிலையில் இந்த மூன்றாவது பாடலுக்கான எதிர்பார்ப்பும் அதிகமாயுள்ளது.

"ஸ்கெட்ச்" திரைப்படத்தின் அடுத்த பாடலும் வெளிவந்தது

  சீயான் விக்ரம் தமன்னா நடிக்கும் “ஸ்கெட்ச்” திரைப்படத்தின் அடுத்த பாடலும் வெளிவந்தது. “தென்றல் தின்கிறாய்….” என்று ஆரம்பிக்கும் பாடலை Yazin Nizar மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் பாடியுள்ளனர். பாடலுக்கான இசை S.தமன்

சக்தி SANTA

சக்தி Santa நேயர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று நத்தார் பரிசுகளை வழங்கியிருந்தார்…

நத்தார் சிறப்பு ஆராதனை

நத்தார் சிறப்பு ஆராதனை யாழ் பாஷையூர் புனித அந்தோணியார் ஆலயத்தில் டிசம்பர் 24ஆம் திகதி இரவு 11.15 க்கு ஆரம்பமாகி தொடர்ச்சியாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆராதனையில் கலந்துகொண்டிருந்தனர்.  

சக்தி FM இன் கிரிக்கட் கொண்டாட்டம்

மலையக கிரிக்கட் வீரர்களுக்கான மிகச் சிறந்த வாய்ப்பினை வழங்கியிருந்தது சக்தி FM இன் கிரிக்கட் கொண்டாட்டம். டிசம்பர் 22ஆம் 23ஆம் திகதிகளில் தலவாக்கலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் மலையகம் முழுவதிலும் இருந்து 80 அணிகள் பலப்பரீட்சை நடாத்தியிருந்தன. அதில் நானுஓயா CYC அணி வெற்றிபெற்று ஒரு லட்ச ரூபாவையும் வெற்றிக்கிண்ணத்தையும் தமதாக்கிக்கொண்டது. இரண்டாமிடத்தை வட்டவளையை சேர்ந்த Indian Power Team ஐம்பதாயிரம் ரூபாய் பணப்பரிசையும் இரண்டாமிடத்துக்கான கிண்ணத்தையும் பெற்றுக்கொண்டது. மேலும் தொடரின் சிறப்பாட்டக்காரராக Indian Power Team இன் வீரர் சிவா 25000 ரூபாய் பணத்துடன் கிண்ணத்தையும் போட்டியின் சிறப்பாட்டக்காரராக