சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் சிறப்பு ரிலீஸ் 

ரஜினிகாந்த் தனது 67-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

ரஜினி பிறந்தநாளுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும், மு.க.ஸ்டாலின், தமிழிசை, திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதேநேரத்தில் போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியை பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். ரஜனி ரசிகர்கள் திரண்டு வருவதால் போயஸ் தோட்டம் முழுவவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரஜினி வீட்டிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், ரசிகர்கள் சாலையிலேயே கேக் வெட்டி ரஜினிகாந்த் பிறந்தநாளை கொண்டாடினர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 6 மொழிகளில் நடித்துள்ள ரஜினி, இதுவரை 160 படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக `எந்திரன்’ படத்தின் இரண்டாவது பாகமான `2.0′ படமும், பா.ரஞ்சித் இயக்கத்தில் `காலா’ படமும் உருவாகி வருகிறது. இதில் `காலா’ படத்தின் 2nd Look ஐ தனுஷ் இன்று வெளியிட்டார்.