நயன்தாராவுடன் என்னை ஒப்பிட வேண்டாம் – ராகுல் ப்ரீத்தி

நயன்தாராவுடன் என்னை ஒப்பிட வேண்டாம் – ராகுல் ப்ரீத்தி

கார்த்தி ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திற்கு கிடைத்த வரவறே்பு காரணமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவியும் நிலையில், நயன்தாராவுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என்று ரகுல் ப்ரீத்தி சிங் தெரிவித்துள்ளார்.

‘ஸ்பைடர்’ படத்திற்கு பிறகு ராகுல் ப்ரீத்திசிங் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்தார். இதில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவியத் தொடங்கி உள்ளன.

நயன்தாராவை போல் முக்கிய இடம் பிடிப்பீர்களா? என்று கேட்டபோது ராகுல் ப்ரீத்திசிங் அளித்த பதில்…

“நயன்தாரா சீனியர் நடிகை. அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்துதான் சிறந்த நடிகை என்பதை நிரூபித்து வருகிறார். நான் இன்னும் அவரைப் போன்ற வேடங்களில் நடிக்கவில்லை.

என்றாலும், அவரைப்போல கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். மற்றபடி நயன்தாரா இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை.

நயன்தாராவுடன் ஒப்பிடும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. நான் இப்போது வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு நடிகை. என் திறமையை இன்னும் வளர்த்துக் கொள்ள முடிந்த அளவு முயற்சிகளை செய்வேன்”.

Credit goes to Newsfirst Tamil