திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் இருப்பது உண்மைதான்: தமன்னா

திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் இருப்பது உண்மைதான்: தமன்னா
Actress Tamanna in Kaththi Sandai Movie Images

கேரளாவில் முன்னணி கதாநாயகியை காரில் கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவமும் நடந்தது.

நடிகைகள் ராதிகா ஆப்தே, கங்கனா ரணாவத், பிரியங்கா சோப்ரா ஆகியோரும் சினிமாவில் பாலியல் தொல்லைகள் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

சினிமாவில் நடிக்க வாய்ப்புக் கேட்டு வரும் புதுமுக நடிகைகள் இந்த தொல்லைகளுக்கு அதிகமாக ஆளாவதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு அனுசரித்துப்போகும் நடிகைகளுக்கே வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகை தமன்னாவும் திரையுலகில் பாலியல் வன்மங்கள் நடப்பதாகப் புகார் கூறியுள்ளார்.

“திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் இருப்பது உண்மைதான். மற்ற நடிகைகள் சொல்லித்தான் இது எனக்கு தெரிந்தது. ஆனால் எனது வாழ்க்கையில் அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. நாம் தேர்ந்தெடுக்கும் வழியைப் பொறுத்துத்தான் நல்லதும் கெட்டதும் வருகின்றன,” என தமன்னா கூறியுள்ளார்.

நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் தென்னிந்தியப் படங்களில் மட்டுமின்றி இந்தித் திரையுலகிலும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.