2017

குத்துப் பாடகராகிய சிவகார்த்திகேயன்

இசையமைப்பாளர் தமனின் இசையில் சிவகார்த்திகேயன் ஒரு குத்து பாடலை பாடியுள்ளார். மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியில் நடைபெற்ற விராட் - அனுஷ்கா திருமணம்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் அணித்தலைவருமான விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக இணைந்து பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இதனால் அவர்கள் காதல் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களின் திருமணம் தொடர்பான பல்வேறு செய்திகள் வெளியானவண்ணம் இருந்தன. டெல்லியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் கடந்த 6-ந்தேதி முடிவடைந்தது. அதில் இருந்து கோலிக்கு சுமார் 20 நாட்கள் வரை ஓய்வு உள்ளது. இந்த நேரத்தில் அவருக்கும் அனுஷ்கா சர்மாவிற்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது. இத்தாலியில் உள்ள மிலன் நகரில் வைத்து திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில்,

சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் சிறப்பு ரிலீஸ் 

ரஜினிகாந்த் தனது 67-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ரஜினி பிறந்தநாளுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும், மு.க.ஸ்டாலின், தமிழிசை, திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியை பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். ரஜனி ரசிகர்கள் திரண்டு வருவதால் போயஸ் தோட்டம் முழுவவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரஜினி வீட்டிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், ரசிகர்கள் சாலையிலேயே கேக் வெட்டி ரஜினிகாந்த் பிறந்தநாளை கொண்டாடினர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 6 மொழிகளில் நடித்துள்ள ரஜினி, இதுவரை 160 படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக `எந்திரன்’ படத்தின்