‘ரெமோ’ வெளியாகும் திகதி அறிவிப்பு – Shakthi FM

‘ரெமோ’ வெளியாகும் திகதி அறிவிப்பு

‘ரெமோ’  வெளியாகும் திகதி அறிவிப்பு

சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெமோ’ படம் ரிலீஸ் திகதி தற்போது வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாய் உருவாகியிருக்கும் படம் ‘ரெமோ’. இப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதையடுத்து, அடுத்தக்கட்ட பணிகளை தொடங்கவுள்ளனர்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் முதன்முதலாக பெண் வேடத்திலும் நடித்துள்ளார். மேலும், பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, ஹாலிவுட் மேக்கப் கலைஞர் சீன் பூட், அனிருத் என பிரம்மாண்ட தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் திகதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதன்படி, இப்படம் வருகிற ஒக்டோபர் 7 ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

இப்படத்தை 24AM Studios நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார், இப்படத்தின் மூலமாக கீர்த்திசுரேஷ் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார்.