மாயவன் படத்தில் 1000-க்கும் அதிகமான கிராஃபிக்ஸ் காட்சிகள் – Shakthi FM

மாயவன் படத்தில் 1000-க்கும் அதிகமான கிராஃபிக்ஸ் காட்சிகள்

mayavan1

‘மாயவன்’ படத்தில் 1000-க்கும் அதிகமான கிராஃபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக இயக்குநர் சி.வி.குமார் தெரிவித்துள்ளார்.

சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘மாயவன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் சி.வி.குமார்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை சி.வி.குமார் தயாரித்திருக்கிறார்.

கிராஃபிக்ஸ் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று, தற்போது தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

செப்டம்பர் முதலாம் திகதி படம் வௌியாகவுள்ளது.

படத்தின் கிராஃபிக்‌ஸ் காட்சிகளுக்கே பெருந்தொகை செலவாகியுள்ளதாக சி.வி.குமார் தெரிவித்துள்ளார்.

Original post credit goes to newsfirst.lk