எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ரசிகர்களுக்கு சுப்பர் ஸ்டாரை சந்திக்கும் வாய்ப்பு – Shakthi FM

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ரசிகர்களுக்கு சுப்பர் ஸ்டாரை சந்திக்கும் வாய்ப்பு

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சென்னையில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் 12 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் ரசிகர்களின் சந்திப்பை தற்காலிகமாக இரத்து செய்து ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில், ஒரு நாளைக்கு 2000 பேர்களுடன் தனித்தனியாக நின்று போட்டோ எடுத்துக்கொள்வது சாத்தியமாகாது என்பதால், மாற்று ஏற்பாடுகளில் இறங்கியுள்ளதாகவும், இருப்பினும், அனைத்து ரசிகர்களுடனும் தனித்தனியாக நின்று போட்டு எடுத்துக்கொள்ளவே தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்திப்பிற்கான புதிய திகதியை விரைவில் அறிவிக்கப்படும் என்று ரஜினிகாந்த் ஆடியோவில் கூறியிருந்தார்.

இந்நிலையில் வரும் 15ஆம் திகதி முதல் ரசிகர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார்.

ரசிகர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.