அஜித்தின் 57 ஆவது படத்தில் காஜல் – Shakthi FM

அஜித்தின் 57 ஆவது படத்தில் காஜல்

அஜித்தின் 57 ஆவது படத்தில் காஜல்

சிவாவின் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

‘வீரம்’, ‘வேதாளம்’ படங்களுக்குப் பிறகு சிவாவும், அஜித்தும் இணையும் மூன்றாவது படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இதனால் அஜித்தின் 57 ஆவது படம் என்றே சொல்லப்பட்டு வருகிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க படக்குழுவினர் காஜலை அணுகியிருக்கின்றனர். அவரும் ஆவலுடன் இதற்கு சம்மதித்திருக்கிறார். காஜல் இன்னும் முறைப்படி பட ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றாலும், அவரே கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஐரோப்பிய நாடுகளில் எடுக்கப்பட உள்ளன.

படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்குகிறது.